அழுகைக்கும் ஒரு அரசாணை

ரோமானியப் பேரரசின் இறுதி ஆண்டுகளில், அரசின் சபைகள் மதியை விட மயக்கத்தின் எதிரொலிகளால் நிறைந்திருந்தன. ஒரு காலத்தில் நாகரிகத்தின் மையமாக இருந்த ரோம், இப்போது பேராசை, திறமையின்மை மற்றும் சந்தேகம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டு, சரிவின் விளிம்பில் தள்ளாடியது.

பளிங்கு மண்டபங்களில் விவாதிக்கப்பட்ட சமீபத்திய முன்மொழிவுகளில் ஒரு விசித்திரமான சட்டம் இடம் பெற்று இருந்தது அது லெக்ஸ் லாக்ரிமாரம் எழுப்பிய "கண்ணீரின் சட்டம்." அதன் நோக்கம் என்ன? இறுதிச் சடங்குகளில் பொது மக்கள் அழுகையை தடை செய்வது!.

"இது துக்கப்படுவதற்காக பணம் கொடுத்து பெண்களை பணியில் அமர்த்துவதை முடிவுக்குக் கொண்டு வரும்!" என்று செனட்டர் காசியானஸ் மேசையில் தன் கையை ஓங்கி அடித்தபடி பறையறைந்தார். "துக்கம் உண்மையாக இருக்கட்டும் அல்லது இல்லாமலே போகட்டும்!"

சபை வாதங்களால் வெடித்தது. சில செனட்டர்கள் சிரித்தனர், மற்றவர்கள் ஆரவாரம் செய்தனர், சிலர் தைரியமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

"ஆனால் துக்கம் மனித இயல்பு!" என்று சில நியாயமான தலைவர்களில் ஒருவரான செனட்டர் ஆரேலியா எதிர்ப்பு தெரிவித்தார். "நீங்கள் உணர்வுகளை முடக்குவதை ஒரு சட்டமாக்க முடியாது. அடுத்து என்ன—பெருமூச்சுகள் அல்லது கிசுகிசுக்களை தடை செய்வதா?"

ஆனால் ஆரேலியாவின் வார்த்தைகள் சத்தத்தில் தொலைந்து போயின. சட்டம் நிறைவேற்றப்பட்டது.



விரைவில், ரோம ராஜ்ஜியத்தில் மரண இறுதிச் சடங்குகளில் அபத்தம் ஆட்சி செய்தது. துக்கப்படுபவர்கள் கட்டாய அமைதியில் நின்றனர். குழந்தைகள் கூட அழுகை வந்தால் காவலாளிகளால் அடக்கப்பட்டனர். பூசாரிகள் மறுபிறவிக்கு விரக்தியுடன் செல்வதைப் பற்றி பேசினர். மேலும் நடிகர்கள்—ஒரு காலத்தில் பணம் கொடுத்து அழ வைக்கப்பட்டவர்கள்—வேலையில்லாமல், குழப்பமாக, மற்றும் மதுக்கடைகளில் அமைதியாக அரசை கேலி செய்தபடி காலம் கழித்தனர்.

இந்த பைத்தியக்காரத்தனங்களின் பின்னால் ஒரு விரக்தியான அரசாங்கம் இருந்தது, அவ்வரசு அமைதியின்மைக்கு பயந்தது, தனது ஆளுமையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுமோ என்று பயந்தது. அமைதி சிதைவை மறைக்கும் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் அமைதியில், அழுகல் இன்னும் சத்தமாக வளர்ந்தது.

ஒரு நாள் காலை ரோமின் சுவர்களில் தடித்த கரி எழுத்துக்களில் பின்வரும் சிசிரோவின் பொன்மொழி எங்கும் எழுதப்பட்டிருந்தது:

"பேரரசின் சரிவு நெருங்க நெருங்க, அதன் சட்டங்கள் மிக மிக பைத்தியக்காரத்தனமாக இருக்கும்."

மக்கள் இரவில் அந்த வரியை கிசுகிசுத்தனர், சோகமாக சிரித்தனர். இப்போது அவர்களுக்கு புரிந்தது—எந்தவொரு பேரரசும் அமைதியாக வீழ்வதில்லை. அது சிரிப்பு, கண்ணீர் மற்றும் எல்லாம் நன்றாக இருப்பதாக பாசாங்கு செய்யும் பைத்தியக்காரத்தனத்தில் சென்றுதான் விழுகிறது.