கடவுள் பாதி மிருகம் மீதி

அரிஸ்டாட்டில் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கிரீஸ் நாட்டின் பண்டைய ஸ்டாகிராவின் பாறை நிறைந்த சாலமன் மலையின் உச்சியில் இருந்த பாழடைந்த கோவிலில் ஒரு மனிதர்  தனியாக வாழ்ந்து வந்ததாக வதந்திகள் பரவத் தொடங்கின. அவர்  பெயர் யாருக்கும் தெரியாது. கிராம மக்கள் அவரை வெறுமனே தியோஸ் என்று அழைத்தனர், அந்த பெயரின் அர்த்தம் 'தெய்வ மகன்' என்பதாகும் . 

ஒரு புயல் புரண்ட இரவில் தியோஸ் அந்த ஊருக்கு வந்சேர்ந்தார் , வெறும் கால்களுடன் கருப்பு கம்பளி மேலாடையில் சுற்றியவாறு, ஒரு சிறிய மரத்தாலான புல்லாங்குழல் மட்டுமே அவரது உடைமையாக இருந்தது. அவர்  எந்த வீடு கட்டவில்லை, எந்த தோட்டமும் அமைக்கவில்லை, எந்த மனிதனிடமும் பேசவில்லை. வெறுமனே காலையிலிருந்து மாலை வரை மலைகளில் நடந்தார், மறக்கப்பட்ட ஏதோ மொழியில் பிரார்த்தனைகளை முணுமுணுத்த படியே இருந்தார், மேலும் மணிக்கணக்கில் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர் வழக்கம்.


ஆர்வம் கொண்ட பல யாத்ரீகர்கள் அந்த கோவிலுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள், சிலர் குழப்பமடைந்தனர். சிலர் அவரை  பித்தன் என்றனர். மற்றவர்கள் அவன் முன்னிலையில் மிகப்பெரும் அமைதியை உணர்ந்ததாக சத்தியம் செய்தனர், அது ஒரு வித்தியாசமான உலகத்திற்குள் நுழைவது போல இருந்தது என்றும் விவரித்தனர். 


உள்ளூர் பிஷப் அவரை ஆபத்தானவன் என்று அறிவித்தார், "மனிதர்களை விட்டு ஓடுகிறவன் கடவுளிடமிருந்து ஓடுகிறான்," என்று அவர் கர்ஜித்தார். ஆனால் அந்த தனிமைத் துறவியை தொந்தரவு செய்ய யாருக்கும் தைரியம் இல்லை.


ஒரு கடுமையான குளிர்காலத்தில், நிகோலாஸ் என்ற சிறுவன், பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட அனாதை இல்லத்தை விட்டு வெளியேறி, மலை மீது ஏறி கோவிலுக்கு அருகில் வந்து மயங்கி விழுந்தான். விழித்தெழுந்ததும், துறவி அவனருகில் அமர்ந்து, மூலிகைகள் மற்றும் தேனில் தோய்த்த ரொட்டியை அவனுக்குக் கொடுக்க காத்திருப்பதைக் கண்டான்.


"ஏன் தனியாக வாழ்கிறீர்கள், ஐயா?" என்று சிறுவன் கேட்டான். துறவி மெல்லியதாக புன்னகைத்து பதிலளித்தார்:

"தனிமையில் மகிழ்பவன் காட்டு மிருகமாகவோ அல்லது கடவுளாகவோ இருக்க வேண்டும்.

நான் ஒரு காலத்தில் முந்தையவனாக இருந்தேன்... இப்போது பிந்தையவனாக மாற முயல்கிறேன்."


நிகோலாஸ் குளிர்காலம் முழுவதும் அவருடன் தங்கியிருந்தான், காற்றின் ஓசையைக் கேட்கவும், அமைதியில் உண்மையை உணரவும் கற்றுக்கொண்டான். ஆனால் வசந்தம் வந்ததும், சிறுவன் ஒரு நாள் காலையில் துறவி காணாமல் போயிருப்பதைக் கண்டான். காலடித் தடங்கள் இல்லை, நெருப்பு இல்லை, அப்படியொருவர்  இருந்ததற்கான எந்த அடையாளமும் அங்கில்லை.


பல வருடங்கள் கடந்தன. நிகோலாஸ் ஒரு துறவியானான், பின்னர் ஒரு மதிக்கப்படும் பெரியவன் ஆனான். அவன் அடிக்கடி யாத்ரீகர்களுக்கு ஸ்டாகிராவின் தெய்வ மகனின் கதையைச் சொல்வான்.


தியோஸ் ஒரு மறக்கப்பட்ட புனிதர் என்று சிலர் நம்பினர். மற்றவர்கள் அவன் ஏதோ ஒரு பண்டைய தெய்வீக வம்சத்தின் வழிவந்தவர் என்று கூறினர்.


ஆனால் ஸ்டாகிராவில், ஆலிவ் தோப்புகளுக்கும் அமைதியான மலைகளுக்கும் இடையே, காற்று இன்னும் மலையிலிருந்து மெல்லிய கிசுகிசுக்களைக் கொண்டு செல்கிறது - எந்த மனிதனும் எழுதாத ஒரு பிரார்த்தனையை புல்லாங்குழல் வாசிப்பது போல.